வீரசக்கதேவி ஆலயத் திருவிழா 64 மதுக்கடைகள், பார்களை நாளை மறுதினம் மூட உத்தரவு

தூத்துக்குடி, மே 10: தூத்துக்குடி மாவட்டத்தில் வீரசக்கதேவி ஆலயத் திருவிழாவை முன்னிட்டு வரும் 12ம் தேதி 64 மதுக்கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஓட்டப்பிடாரம் வட்டம் பாஞ்சாலங்குறிச்சி கிராமம் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி கோயில் திருவிழா, 12.5.2023 மற்றும் 13.5.2023 ஆகிய 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதையடுத்து சட்டம், ஒழுங்கை பராமரிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 64 அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்களை பொதுமக்கள் நலன் கருதியும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டும் 12.5.2023 அன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது. அன்றைய நாளில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு