வீட்டை உடைத்து திருடிய இளைஞர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த திருவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (59). இவர் சென்னை கார்ப்பரேஷனில் மலேரியா பிரிவில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் கோபாலகிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லாததால் திருவூரில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே உள்ள சரஸ்வதி அம்மா வீட்டில் இருந்து சிகிச்சை அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து சிகிச்சை பலனளிக்காமல் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி கோபாலகிருஷ்ணன் இறந்துவிட்டார்.இந்நிலையில் வீடு தொடர்ந்து பூட்டப்பட்டிருந்ததை பார்த்த மர்ம நபர்கள் 2 பேர் நேற்று முன்தினம் இரவு திருவூரில் பூட்டப்பட்டிருந்த வீட்டிற்கு சென்று ஒருவர் வெளியே நின்றுகொள்ள மற்றொருவர் உள்ளே சென்று பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 3.5 சவரன் நகைகளை திருடிக் கொண்டு பக்கத்தில் இருந்த இன்னொரு பீரோவை உடைக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது வெளியில் நின்று கொண்டிருந்த நபரைப் பார்த்து நாய்கள் குறைத்துள்ளது. இந்த சத்தத்தைக் கேட்ட பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் எழுந்து வந்து பார்த்து  திருடன் திருடன் என சத்தம்போட்டுள்ளார். இந்த சத்தத்தைக் கேட்டவுடன் 2 பேரும் 3.5 சவரன் தங்க நகைகளை மட்டும் திருடிக்கொண்டு தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடிவந்தனர். இந்நிலையில் கூடப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த மணி மகன் சரவணன் (23) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள பாவாடை என்பவரை தேடி வருகின்றனர். …

Related posts

பாலியல் தொல்லை தந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காததால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

கள்ளதொடர்பு விவகாரம்; கடிதம் எழுதி வைத்து விட்டு பெண் தூக்கிட்டு தற்கொலை: கள்ளக்காதலன், கணவர் கைது

பைக்கில் ரோந்து சென்றபோது போலீஸ்காரர் மீது தாக்குதல்: ஐடி ஊழியர் கைது; ரவுடி ஓட்டம்