வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் சிறுவர் பூங்காவை சீரமைக்க கோரிக்கை

கரூர்: கரூர் தாந்தோணிமலை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலையில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்குள்ள அபார்ட்மெண்ட்டுகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் நலன் கருதி இதே வளாகத்தில் சிறுவர், சிறுமிகள் பயன்படுத்தும் வகையில் சிறுவர் பூங்கா வளாகம் அமைத்து தரப்பட்டது. சில ஆண்டுகளுக்கு பிறகு இந்த பூங்கா வளாகத்தில உள்ள உபகரணங்கள் அனைத்தும் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக இதனை பயன்படுத்திட முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த பகுதி சிறுவர்களின் நலன் கருதி இந்த பூங்கா வளாகத்தை புதுப்பித்து தந்து அனைவரும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. துறை அதிகாரிகள், இந்த குடியிருப்பு வளாகத்தில் பழுதடைந்த நிலையில் உள்ள இந்த பூங்காவை விரைந்து சீரமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு