வீட்டில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கடலூர், செப். 3: வீட்டில் ஒரு கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் முதுநகர் அருகே உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடலூர் முதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் குமாரசாமி மற்றும் போலீசார் கடலூர் முதுநகர் அருகே உள்ள பச்சையாங்குப்பம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்த வாலிபர் ஒருவர் தப்பி ஓட முயன்றார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், பச்சையாங்குப்பம், கிழக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் மகன் தீனா (23) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் தனது வீட்டில் ஒரு கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதன் பின்னர் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று அங்கு மறைத்து வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் தீனா மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்