வீட்டின் முன்பு கழிவுநீர் வெளியேறுவதால் தகராறு காய்கறி வியாபாரிக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு: சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பரபரப்பு

சென்னை:  வீட்டின் முன்பு கழிவுநீர் வெளியேறுவதால் ஏற்பட்ட தகராறில் காய்கறி வியாபாரிக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக 3 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை(எ) குட்டி(42). இவர் மயிலாப்பூர் தெற்கு மாடவீதியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஏழுமலை வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீர் எதிர்வீட்டில் வசிக்கும் ராணி என்பவரின் வீட்டின் முன்பு செல்வதால் இருவருக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. இதனால் கடந்த 3 மாதத்திற்கு முன்பு இரு வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்திலும் வழக்கு உள்ளது. இந்நிலையில் ஏழுமலை வீட்டில் இருந்து கழிவுநீர் ராணியின் வீட்டின் முன்பு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று இரவு மீண்டும் இரு வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அடிக்கடி தகராறு ஏற்படுவதால் ராணியின் மகள் உஷா தனது கணவர் ராஜா என்பவரிடம் கூறியுள்ளார். உடனே ராஜா தனது நண்பர்களுடன் அரிவாள் உள்ளிட்ட பட்டாக்கத்தியுடன் ஏழுமலையிடம் தகராறு ெசய்துள்ளனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றியதில் ராஜா தனது நண்பர்களுடன் சேர்ந்து ஏழுமலையை அரிவாளால் வெட்டியுள்ளார். உடனே சுதாரித்துக்கொண்ட ஏழுமலை அங்கிருந்து வெட்டு காயங்களுடன் தப்பி ஓடினார். ஆனால் விடாமல் ராஜா தனது நண்பர்களுடன் துரத்தினார்.அனால் ஏழுமலை தப்பி ஓடிவிட்டார். பிறகு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஏழுமலை சம்பவம் குறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி பதிவுகளை வைத்து தகராறில் ஈடுபட்ட ராணி, அவரது மூத்த மகள் கற்பகம், இளைய மகள் உஷா, அவரது கணவர் ராஜா, செல்லத்துரை ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து 2 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்