வீட்டின் சென்சார் கதவு பூட்டிக் கொண்டதால் இரவு முழுவதும் சிக்கி தவித்த தொழிலதிபர் குடும்பத்தை மீட்ட தீயணைப்பு வீரர்கள்: ஜன்னல் கிரிலை உடைத்து உள்ளே புகுந்தனர்

சென்னை: சாலிகிராம் அடுக்குமாடி குடியிருப்பு முதல் மாடியை சேர்ந்தவர் பாலாஜி(48). தொழிலதிபரான இவர் தனது மனைவி விஜயலட்சுமி, மகள் காவியா ஆகியோருடன் வசித்து வருகிறார். தொழிலதிபர் என்பதால் இவரது வீட்டிற்கு சென்சார் பொருத்தப்பட்ட கதவு அமைத்துள்ளார். கடும் மழை காரணமாக மின் இணைப்பு சரியாக வேலை செய்யவில்லை. இதனால் கதவில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் பழுதானதாக கூறப்படுகிறது. வீட்டின் கதவு திறக்க முடியாமல் தொழிலதிபர் தனது குடும்பத்துடன் வீட்டிற்குள்ளேயே நேற்று முன்தினம் இரவு முழுவதும் சிக்கி வெளியேற முடியாமல் தவிர்த்து வந்துள்ளார்.பல முறை முயற்சி செய்தும் கதவு திறக்க முடியவில்லை. அதைதொடர்ந்து தொழிலதிபர் பாலாஜி சம்பவம் குறித்து தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார். அதன்படி தீயணைப்பு வீரர்கள் நேற்று காலை தொழிலதிபர் வீட்டிற்கு வந்து கதவை திறக்க பல வகையில் முயற்சி செய்தனர். ஆனாலும் கதவு திறக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ராட்சத கட்டர் உதவியுடன் வீட்டின் ஜன்னலில் பொருத்தப்பட்டுள்ள கிரில் கேட்டை வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தினர். பிறகு ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்று தொழிலதிபர் பாலாஜி மற்றும் அவரது மகள், மனைவியை பத்திரமாக மீட்டனர்….

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்