வீட்டின் இரு முக்கிய அறைகள்

நன்றி குங்குமம் தோழி

ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் முக்கியமானது இரண்டு அறைகள். அதில் ஒன்று பூஜையறை, மற்றொன்று சமையலறை. இவை இரண்டும் சுத்தமாக இருந்தாலே வீட்டில் எந்தவித நோயும் நம்மை அண்டாது. இப்போதெல்லாம் முன்போல் தனியே பூஜையறை கட்டுவதில்லை. சமையலறையில் ஒரு அலமாரிதான் ஒதுக்கப்படுகிறது. அல்லது ரெடிமேட் பூஜை அறை கடைகளில் விற்கப்படுகிறது. அதை அப்படியே செட் செய்து விடுகிறோம். இதற்கு முக்கிய காரணம் இடப்பற்றாக்குறை. இருக்கும் இடத்தில் தெய்வீகம் கமழும் பூஜை அறையினை எவ்வாறு அமைத்து அதை பராமரிக்கலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
பூஜையறை

*அளவான, முக்கியமான, குலதெய்வ சுவாமி படங்கள் வைத்தால் சுத்தமாகவும், பளிச்சென்றும் இருக்கும்.*விளக்கு, திரி, தீப்பெட்டி, எண்ணெய் போன்றவற்றை வைக்க தனியாக ஒரு இடம் விட்டால் நன்றாக இருக்கும்.*தினமும் சுவாமி படங்களுக்கு சூட்டியுள்ள பழைய பூமாலைகளை எடுத்துவிட்டு, புதிய பூமாலைகள் சூட்ட வேண்டும்.*குளித்துவிட்டு, பூஜை மாடத்தை, அறையை தண்ணீரில் சிறிது பன்னீர் கலந்து மெழுகினால், சுத்தமாகவும், மணமாகவும் இருக்கும். *பல வண்ணங்கள் பொடி கொண்டு கோலமிடலாம். *உப்பு கலந்த நீரில் பூவை நனைத்து, உதறி வைத்தால் எறும்பு வராது. பூக்கள் மாலை வரை வாடாமல் புத்தம் புதிதாக இருக்கும்.*ஊதுபத்திகளை வாழைப்பழத்திலோ, வேறு பழத்திலோ செருகாமல், அதற்குரிய ஸ்டாண்டில் வைக்க வேண்டும். ஊதுபத்தியின் குச்சியில் உள்ள சாயம் உடலுக்கு நல்லதல்ல.*விளக்குகளை எவர்சில்வர் பித்தளைத்தட்டில் வைத்து ஏற்றினால் எண்ணெய் கீழே சிந்தாது.சமையலறை நாம் உயிர்வாழத் தேவையான உணவு சமைக்கும் இடம் சமையலறை. இதனை பூஜை அறைக்கு அடுத்து சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். *சமையலறை வெளிச்சமாகவும், காற்றோட்டமாகவும் இருப்பது அவசியம்.*திரைச்சீலைக்குப்பதில் ஜன்னலில் கம்பி வலை பொருத்தினால், வெளிச்சமும் காற்றும் கிடைக்கும்.*தினமும் இரவு சாப்பிட்ட பிறகு, சமையல் அறை, மேடை, அடுப்பு, தரை அனைத்தையும் சுத்தப்படுத்தி விட்டால் மறுநாள் காலை சமையல் செய்ய சௌகரியமாக இருக்கும். *பாத்திரங்கள் கழுவியதும் சிங்க்கையும் கழுவி உலர விட வேண்டும். *அடுப்பு, மேடையை சோப்பு பவுடருடன் சிறிது ஷாம்பு கலந்து தேய்த்து துடைத்துவிட்டால் சுத்தமாக, மணமாக இருக்கும்.*மேடையின் பின்புறமுள்ள டைல்ஸ் பதித்த சுவர்களை அடிக்கடி துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.*மளிகை சாமான்கள், காய்கறிகள், உணவுப்பண்டங்கள், பாத்திரங்கள் இவற்றை தனித்தனி அலமாரிகளில் அடுக்கி வைத்தால் சட்டென்று எளிதில் எடுக்கலாம்.தொகுப்பு: எஸ்.ராஜம், திருச்சி.

Related posts

சென்செக்ஸ் 379 புள்ளிகள் உயர்ந்து 79,855 புள்ளிகளை தொட்டு புதிய உச்சம்..!!

சிறுகதை-உறவு முத்திரை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.53,240க்கு விற்பனை..!!