வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்துவதில் விரிவான செயல்திட்டத்தை வகுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுரை

சென்னை: வீடற்றவர்களுக்கு வீடு வழங்க வேண்டும், அதேநேரம் அனைத்தும் இலவசம் என்ற எண்ணத்தை அரசு ஏற்படுத்திவிடக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. சேலம் தாத்தையாம்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை வீடில்லா ஏழைகளுக்கு மனையாக வழங்க உத்தரவிடக் கோரும் வழக்கில் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வீடற்ற மக்களுக்கு வீட்டு வசதி ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான விரிவான திட்டம் வகுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மனுதாரர் கூறும் நிலத்தில் பள்ளி கட்டுவதற்கு ஒதுக்க கோரி வட்டாட்சியரால் மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. வீடற்ற ஏழைகளுக்கு நிலம் (அ) வீடு வழங்கும் வகையில் மாவட்ட வாரியாக நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது….

Related posts

அமாவாசை, வார இறுதியையொட்டி சிறப்புப் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துத்துறை தகவல்

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் : தெற்கு ரயில்வே