விவேகானந்தர் பிறந்தநாள் விழா

தொண்டாமுத்தூர், ஜன.13: இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றம் சார்பில் தொண்டாமுத்தூர் ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மாணவர் விடுதியில் சுவாமி விவேகானந்தர் 162வது பிறந்தநாள் விழா மற்றும் தேசிய இளைஞர் தின விழா கொண்டாடப்பட்டது. மன்றத் தலைவர் டாக்டர் சிவக்குமார், விவேகானந்தர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். விடுதி காப்பாளர் மகேஷ் குமார், சமூக ஆர்வலர் வருண், நிவேதா ஆகியோர் இனிப்பு வழங்கினர். விடுதி பணியாளர்கள் சுப்ரமணியன், தண்டபாணி, சுப்புலட்சுமி மற்றும் விடுதி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்