விவசாய நிலங்களில் மின்வேலி வனத்துறையினர் ஆய்வு

 

காங்கயம், ஆக. 27: காங்கயம் வனச்சரகம், ஊதியூர் காப்பு காட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலங்களில் மின்சார வேலி பயன்பாடு உள்ளதா? என தணிக்கை செய்யப்பட்டது.  விவசாயி குப்புசாமி நிலத்தில் தணிக்கையின்போது திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் கணேஷ் ராம், காங்கயம் வனச்சரக அலுவலர் தனபாலன் மற்றும் வனத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர். அப்போது காப்புக்காடு அருகில் 5 கி.மீ உள்ள நிலங்களில் மின் வேலிகள் பயன்படுத்துவதாக இருந்தால் மாவட்ட வன அலுவலர் அல்லது துணை இயக்குனர் அலுவலகத்தில் முறையாக தடையின்மை சான்று பெற வேண்டும் என்று விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Related posts

ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்தவர்கள் கைது

குன்றத்து மலை மீது சோலார் மின் விளக்கு

மேலூரில் சிஐடியு கண்டன ஆர்ப்பாட்டம்