விவசாய நிலங்களில் சீமைகருவேல மரங்களை அகற்ற 50 சதவீதம் மானியம்

இளையான்குடி, ஜூலை 4: இளையான்குடி வட்டார தோட்டக்கலை துறையில், தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறி நாற்றுகள், பழக்கன்று சாகுபடி செய்யவும், மழைநீர் சேமிக்க பண்ணைக்குட்டை அமைக்கவும், பயிர்களுக்கு இயற்கை உரத்திற்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இத்திட்டத்தில் நடப்பாண்டில் புதிய திட்டமாக விவசாய நிலங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு 50 சதவீதம் மானியமாக ரூ.7500 வழங்கப்பட உள்ளது.

மேலும் விவசாயம் செய்ய ஏதுவாக நுண்ணீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயன் பெற விரும்பும் விவசாயிகள் தங்களது நிலத்தின் பட்டா, அடங்கல், ஆதார், போட்டோ ஆகியவற்றுடன், இளையான்குடி வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை நேரில் அருகிலும் என, இளையான்குடி வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் பாண்டிராஜ் தெரிவித்தார்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்