விவசாயிகள் வங்கி கணக்கில் ரூ.1.82 லட்சம் கோடி பணம்: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி: ‘விவசாய நிதியுதவி திட்டங்கள் மூலமாக, 11.3 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக ரூ.1.82 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது,’ என்று பிரதமர் மோடி கூறினார்.இது குறித்து பிரதமர் மோடி நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:நமது விவசாய சகோதர, சகோதரிகளால் நாடு பெருமை கொள்கிறது. பஞ்சாப்பில் பைசாகி, மராட்டியத்தில் குடி பட்வா, கர்நாடகா, ஆந்திராவில் உகாதி,  ஜம்மு காஷ்மீரில் நவ்ரே, மேற்கு வங்கத்தில் பொய்லா போயிசாக், அசாமில் போஹாக் பிகு, கேரளாவில் விஷு என பல்வேறு பெயர்களில் அறுவடைக் காலம் இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் மேலும் வலுப்பெற்றால் புதிய இந்தியா மேலும் வளம் பெறும். பிரதமரின் விவசாய நிதி உதவி மற்றும் விவசாயம் தொடர்பான பிற திட்டங்கள், நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு புதிய பலத்தை அளித்து வருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாட்டில் 11.3 கோடி விவசாயிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1  லட்சத்து 82 ஆயிரம் கோடி நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கொரோனா ஆபத்து முடிந்து விடவில்லைகுஜராத் மாநிலம் ஜூனாகட் மாவட்டத்தில் உள்ள உமியா மாதா கோயிலில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி மூலம் மோடி பேசுகையில், ‘‘கொரோனா தொற்று, நம்மிடமிருந்து முற்றிலும் மறையவில்லை. அது தற்போது ஓய்ந்து இருக்கலாம். அது மீண்டும் எப்போது தாக்கும் என்று யாருக்கும் தெரியாது. எனவே, மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கொரோனா உருமாற்றமாகி வரும் ஒரு நோய். தொற்றை தடுக்க 185 கோடி டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது உலக நாடுகளையே ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது.  மக்களின் ஒத்துழைப்பால்தான் இது சாத்தியமாகி உள்ளது,’’ என்றார்….

Related posts

சட்டீஸ்கரில் நக்சல் கண்ணி வெடியில் சிக்கி 5 போலீசார் காயம்

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம்

மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்பாளராக பிரகாஷ் கரத் நியமனம்