விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் தொடர் காத்திருப்பு போராட்டம் ஏராளமானோர் குவிந்ததால் பரபரப்பு

கரூர், ஆக. 9: கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த நூற்றுக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக விவசாயிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இனாம் நில விவசாயிகள் குத்தகையாளர்கள் வீடு மனை உரிமையாளர்கள் இயக்கம் ஆகியவற்றின் சார்பில் நேற்று இனாம் ஒழிப்பு சட்டத்தின் வாயிலாக பெற்ற ரயத்துவாரி பட்டாவை கருத்தில் கொள்ளாமல் டிஆர்ஓ பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக கூறி நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதன் காரணமாக கரூர் திண்டுக்கல் சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வந்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களிடம், இந்த பிரச்னை குறித்து அமைதிக் கூட்டம் நடத்தி பேசிக் கொள்ளலாம் என கூறியதையடுத்து அனைவரும் அங்கிருந்து சென்றனர். இந்த போராட்டத்திற்காக கரூர் கலெக்டர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கானோர் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது