விவசாயிகள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம், ஆக.23: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு காஞ்சிபுரம் கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில், வேளாண் அறிவியல் நிலைய வல்லுநர்களும், அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்துகொண்டு, வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.

ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்குமாறு பிஎம் கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள தவணை தொகையினை பெறும் வகையில், அனைவரும் இ-கேஓய்சி மூலம் பிஎம் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். மேலும், பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைபேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம். ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள கைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல் பிஎம் கிசான் இணையதளத்தில் பதிவு செய்து உறுதி செய்யலாம்.

பொது சேவை மையத்தில் உள்ள கருவியில் பயனாளிகள் தங்கள் விரல் ரேகையை பதிவு செய்து பிஎம் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். உங்களது கைபேசியில் வைத்துள்ள இணையதள வசதியை பயன்படுத்தி, http://pmkisan.gov.in எனும் இணையதளத்தில் சென்று ஆதார் e-KYC எனும் பக்கத்திற்கு சென்று ஆதார் எண்ணை உறுதி செய்யலாம். மேலும், பிஎம் கிசான் தவணை தொகை பெறும் பயனாளிகள் இதுநாள் வரை ஆதார் எண்ணை உறுதி செய்யாமல் இருந்தால் மேற்காணும் முறைகளில் பிஎம் கிசான் இணையதளத்தில் ஆதார் எண்ணை உறுதி செய்திடுமாறும், பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை பயன்பெறாத விவசாயிகள் உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி, இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்