விவசாயிகள் குறைதீர் கூட்டம்

அரூர்,செப்.3: அரூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர் கூட்டம், ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர் தலைமை தாaங்கினார். கூட்டத்தில் கிராம பகுதிகளில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்து தர பதிவு துறையில் பணம் கட்டினாலும், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பிரிவு செய்து தருவதில்லை. அரூர் பகுதியில் பெரும்பாலான் ஏரிகள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே, உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் தாசில்தார்கள் பெருமாள், வள்ளி, நேர்முக உதவியாளர் இளஞ்செழியன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை