விவசாயிகள் குறைதீர் கூட்டம்

காஞ்சிபுரம், ஆக. 3: காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஜூலை மாதத்திற்கான விவசாயிகளின் நலன் காக்கும் நாள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு கலெக்டர் தலைமையில் வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில், வேளாண் அறிவியல் நிலையம், காட்டுப்பாக்கம் வல்லுநர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பாக அறிவுரைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு விளக்கம் அளிக்க உள்ளனர்.
ஆகவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம். மேலும், பிஎம் கிசான் திட்டத்தில் அடுத்து விடுவிக்கப்பட உள்ள 13வது தவணை தொகையினை பெறும் பொருட்டு அனைவரும் இ-கேஒய்சி மூலம் பிஎம் கிசான் கணக்கினை புதுப்பிக்க வேண்டும். பயனாளிகள் பொது சேவை மையம் மூலமாகவோ அல்லது தங்களது கைப்பேசி மூலமாகவோ, தாங்களாகவே ஆதார் எண்ணை கீழ்க்காணும் முறைகளில் உறுதி செய்து கொள்ளலாம்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை