விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பயிர்கடன்: கலெக்டர் வழங்கினார்

 

காஞ்சிபுரம், ஜூலை 1: காஞ்சிபுரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு பயிர்கடன், கால்நடை, இடுப்பொருட்கள் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொண்டு, விவசாயிகளுக்கு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் வழங்கினார். மேலும், விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறைசார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில், 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.5,51,845 மதிப்பீட்டில் பயிர்க்கடன்களும், 6 விவசாய பயனாளிகளுக்கு ரூ.3,08,000 மதிப்பீட்டில் கால்நடை பராமரிப்புக் கடன்களும் மற்றும் வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில், 5 விவசாய பயனாளிகளுக்கு ரூ.5,700 மதிப்பிலான வரப்புப்பயிர் (உளுந்து), நேரடி நெல் விதைப்பு கருவி, தென்னங்கன்று, போன்ற வேளாண் இடுப்பொருட்களை மானியத்துடன் கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வேளாண்மை இணை இயக்குநர் (பொ) சுரேஷ், வேளாண்மை துணை இயக்குநர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வே) (பொ) ராஜ்குமார், மண்டல இணை பதிவாளர் ஜெய, அரசு அலுவலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்