“விவசாயிகளுடன் ஒரு நாள்’ திட்டம்.. நாகூரில் நெய்தல் பாரம்பரியப் பூங்கா… வேளாண்துறை சார்பில் புதிய திட்டங்கள் அறிவிப்பு!!

சென்னை : விவசாயிகளின் கோரிக்கைகளை அறிந்து அதற்கு தீர்வு காண விவசாயிகளுடன் ஒரு நாள் என்ற திட்டம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் அறிவித்தார்.தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்றைய தினம் கால்நடை, வேளாண் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அவையில் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் குறைகளை கேட்க ‘விவசாயிகளுடன் ஒருநாள் திட்டம்’ செயல்படுத்தப்படும். மாதம் ஒரு நாள் அனைத்து எம்எல்ஏக்களும் கிராமங்களுக்கு சென்று விவசாயிகளின் கருத்துக்களை கேட்க வேண்டும். ஓராண்டில் 2,500 கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், வேளாண்துறை சார்பில் 25 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். *வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ரூ. 30 கோடி மதிப்பில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் துவங்கப்படும். *ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100% மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர்ப் பாசன வசதி அமைத்து தருவதற்காக ரூ.12 கோடி செலவிடப்படும். *விழுப்புரம் மாவட்டம்  மேல்மலையனூர், வல்லம், திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர், தருமபுரி மாவட்டம் அரூர் ஆகிய 4 வட்டாரங்களில் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம் கட்டுவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும். *உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பொருட்களை சந்தைப்படுத்த சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் பகுதிகளில் ரூ.8 கோடி செலவில் 50 சிறப்பு அங்காடிகள் அமைக்கப்படும். *நெல் உற்பத்தியை உயர்த்த 25,000 ஏக்கரில் துத்தநாக சல்பேட்டும், ஜிப்சமும் 50% மானியத்தில் வழங்கும் திட்டம் ரூ. 3 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். *நாகை மாவட்டம்  நாகூரில் நெய்தல் பாரம்பரியப் பூங்கா 2021-2022ம் ஆண்டில் ரூ.2 கோடி நிதியில் அமைக்கப்படும். *வேளாண் இயந்திரங்களை கிராமப் பகுதியில் பழுது பார்க்க திருச்சி மாவட்டம் குமுளூர் வேளாண்மை பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் 2 வருட வேளாண் பொறியியல் பட்டயப்படிப்பு ஒரு கோடி ருபாய் மதிப்பில் துவங்கப்படும். *தரிசு நில தோட்டக்கலை சாகுபடியில் சிறந்த விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்படும். *பூச்சிக் கொல்லி மருந்து உரிமம் வழங்குதல், பூச்சிக் கொல்லி மருந்து சட்ட மேலாண்மை முறைகளை விரைவுபடுத்துவதற்கு 2021-2022ம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் செயல்படும் வகையில் பெமிஸ் மென்பொருள் அறிமுகப்படுத்தப்படும். *திருப்பூரில் புதிய விதைப் பரிசோதனை நிலையம் அமைக்கப்படும்.*காளான் உற்பத்தி கூடம் அமைக்க 100 மகளிருக்கு ஒரு கோடி ரூபாய் மானியமாக வழங்கப்படும். *தர்மபுரி, கடலூர், ராணிப்பேட்டை, திருவாரூரில் 4 அங்கமாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்படும்…

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை