விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி

செய்யூர்: தமிழக அரசு சார்பில் வேளாண் சட்ட மசோதா கொண்டு வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு தேவையான விவசாய உபகரணங்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதே போல் செங்கல்பட்டு மாவட்டம் இலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்யசித்தி கிராமத்தில் வேளாண்மை துறை மற்றும் உழவர் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு அவர்களுக்கு தேவையான விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இலத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர்  சுபலட்சுமி பாபு தலைமை தாங்க,  ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், ஒன்றியக்குழு கவுன்சிலர் அங்கயற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு விவசாயத்திற்குத் இயற்கை முறையில் விவசாயம் செய்வது தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்வது இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது குறித்து வேளாண்மை  துணை அலுவலர் சந்தானம்,  வேளாண்மை அலுவலர் ஐய்யப்பன் ஆகியோர் பேசினர்.இதனைத் தொடர்ந்து விவசாயத்திற்குதேவையான  மண்வெட்டி, பாண்டு, கடப்பாரை, மருந்து தெளிப்பான், தார்பாய் உள்ளிட்ட உபகரணங்களும்  மற்றும் மானிய விலையில் உளுந்து, சணல்பை உள்ளிட்ட விதை பொருட்களை ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி ஜனார்த்தனம், உதவி விதை அலுவலர் லேவிஸ் ரூபன், உதவி வேளாண்மை அலுவலர்கள் முஸ்தபா, தனஞ்செழியன் , ராஜசேகர்  உள்ளிட்ட விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்….

Related posts

3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதாக அறிவிப்பு

தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை நாளை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்