விவசாயிகளுக்கு மண்வள அட்டை

ஆர்.எஸ்.மங்கலம்,செப்.26: ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலி கிராமத்தில், மண்வள அட்டை குறித்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு முகாம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலட்சுமி தலைமையில் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபாரதி ராசு முன்னிலை வைத்தார். மண் பரிசோதனை செய்வதன் அவசியம், மண் மாதிரிகள் சேகரிக்கும் முறை, மண் ஆய்வு குறித்து நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் உமா விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் பயிர்களுக்கு தேவையான பேரூட்டச்சத்துக்கள், நுண்ணூட்டசத்து மற்றும் மண்வள அட்டையின் முக்கியத்துவம் பற்றியும், மண்வள அட்டை பரிந்துரைப்படி உரமிடுதல் குறித்தும், களர் அமிலம் மற்றும் உவர் நிலச் சீர்திருத்தம் மற்றும் மண்வளத்தை பாதுகாக்க இயற்கை மற்றும் அங்கக உரங்களின் பயன்பாடு, பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்பாடு, முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் திட்டம் குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் ராஜலெட்சுமி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

அதேபோல் வேளாண்மை அலுவலர் சுப்ரியா மண்வளத்தை காக்கும் வகையில் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது. அதனை விவசாயிகள் முறையாக பயன்படுத்தி கொண்டு பயனடைய வேண்டும் எனக் கூறினார். இம்முகாமில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு உதவி வேளாண்மை அலுவலர் லாவண்யா மண்வள அட்டை விநியோகம் செய்தார்.

Related posts

திருச்சி மாவட்டத்திற்கு சட்டசபையில் அறிவிக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி அரங்கம் மட்டுமே தரம் குறைவு

குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

திருவெறும்பூர் அருகே தனியார் கம்பெனியில் இரும்பு திருடியவர் கைது