விவசாயிகளுக்கு பயிற்சி

சேந்தமங்கலம்: கொல்லிமலையில் நெல், மிளகு சாகுபடி செய்யும் விவசாயிகள் அதிக மகசூல் பெறுவதற்கு ஒன்றிய அரசின் இந்திய நெல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்பட்டது. கொல்லிமலை ஒன்றியம், வாழவந்திநாடு செம்மேடு வல்வில் ஓரி அரங்கத்தில் ஒன்றிய அரசின் இந்திய நெல் ஆராய்ச்சி மற்றும் புதுச்சேரி – ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லூரி ஆராய்ச்சி நிலையம் சார்பில், புதிய தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி மலைவாழ் மக்களுக்கு அளிக்கப்பட்டது. முகாமிற்கு காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் டாக்டர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பாஜ தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றிய அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பிரிவு மாநில துணை தலைவர் லோகேந்திரன் முன்னிலை வகித்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை