விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் தரும் கிஷான் கார்டு திட்டம்: ஆண்டுக்கு ரூ.3 லட்சம் வரை பெறலாம்

 

மதுரை, டிச. 3: ஒன்றிய அரசின் சார்பில் விவசாயிகளின் நிதி தேவைகளுக்காக கிஷான் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த கார்டு மூலம் விவசாய இடுபொருட்கள், உரங்கள் வாங்கலாம். இதுகுறித்து மதுரை வேளாண் இணை இயக்குநர் சுப்புராஜ் கூறியதாவது: ஒன்றிய அரசின் கிஷான் கடன் அட்டை மூலம் ரூ.3 லட்சம் வரை ஆண்டுக்கு 4 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் வரை கடன் பெற அடமானம் தேவை இல்லை. வங்கி நடைமுறைகள் ஏதுமின்றி விரைவாக கடன் பெறும் வசதியும் உள்ளது.

இந்த கிஷான் கடன் அட்டை 5 ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். மேலும் கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்துவோருக்கு கூடுதல் சலுகைகளும் உள்ளன. இதுவரை கிஷான் கடன் அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டை நகல், 2 புகைப்படம், கணினிசிட்டா மற்றும் சாகுபடி அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் கிஷான் கடன் அட்டை ஒரு பக்க படிவத்தில் பூர்த்தி செய்து, உங்களது கிராமங்களில் நடைபெறும் கூட்டங்களிலோ அல்லது சம்மந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டு சமர்ப்பிக்கலாம். இவ்வாறு கூறினார்.

Related posts

சிவாய நம சிவாய நம விண்ணை பிளக்க நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்

தம்பதியின் உறவினர்கள் 2 பேர் கைது