விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக்கோரி மனு

 

சிவகங்கை, அக்.17: வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் விவசாயிகள் கலெக்டர் ஆஷாஅஜித்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டத்தில் வறட்சி நிவாரணத் தொகையாக ரூ.25 கோடியே 76லட்சத்து 35ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பயிர் இன்சூரன்ஸ் காப்பீடு செய்த 98ஆயிரம் விவசாயிகளில் 20ஆயிரம் விவசாயிகளுக்கு மட்டும் ரூ.9கோடியே 74லட்சத்து 38ஆயிரம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, காளையார்கோவில், மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை ஆகிய பகுதிகளில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் இன்சூரன்ஸ் இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.

முழுவதும் வறட்சி பாதித்த பகுதிகளில் வறட்சி நிவாரணம் பெற்ற விவசாயிகளுக்கு, பயிர் இழப்பீடு தொகை கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்காப்பீடு கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

கருத்தப்பாலம் பகுதியில் சீரமைப்பு பணி

தூத்துக்குடியில் ஜூலை6ம் தேதி வரை நீதிமன்ற புறக்கணிப்பு