விவசாயிகளுக்கு இடுபொருட்கள், கருவிகள்

கும்பகோணம், செப். 4: வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பாக, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டாரம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் பி-3 செயல்விளக்கத்தின் கீழ், வேளாண் இடுபொருட்கள் மற்றும் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அன்பழகன் எம்எல்ஏ கலந்து கொண்டு 2 பயனாளிகளுக்கு கை தெளிப்பான்களையும், 5 பயனாளிகளுக்கு தார்பாய்களையும், 2 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்கம் கிட்களையும், 1 பயனாளிக்கு பருத்தி கிட்டையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், கும்பகோணம் ஒன்றியக்குழு துணைத்தலைவரும், மத்திய ஒன்றிய திமுக செயலாளருமான கணேசன், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சுதாகர், மாவட்ட திமுக பிரதிநிதி கரிகாலன், கும்பகோணம் அட்மா குழு தலைவர் ஆலமன்குறிச்சி குமார், வேளாண்மை அலுவலர் அசோக்குமார், துணை வேளாண்மை அலுவலர் சாரதி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் தனசேகரன், இளமதி மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை