விவசாயிகளின் நலன்காக்கும் வேளாண் பட்ஜெட் எம்எல்ஏ மாங்குடி புகழாரம்

காரைக்குடி: எம்எல்ஏ மாங்குடி கூறுகையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள வேளாண் பட்ஜெட் விவசாயிகளின் நலன்காக்கும் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வரும் நிதியாண்டில் 127 லட்சம் டன் உணவு உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மண்வளத்தை பேணிக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமாக அனைத்து வேளாண் செய்முறைகளை ஊக்கப்படுத்த முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் என்ற புதிய திட்டத்தை அறிவித்து இதற்கு ரூ.206 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்க கூடியது. பூச்சிநோய் தாக்கத்தை கட்டுப்படுத்த 10 லட்சம் வேப்ப மரக்கன்றுகள் இலவசம், அமிலம் கலந்த நிலத்தை சீர்படுத்த 15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரண்டு லட்சம் விவசாயிகளின் நிலத்தில் மண் பரிசோதனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் தங்கள் நிலத்தில் மண் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவாக அமையும்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை