விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அங்கன்வாடி மையத்தில் கொடுக்கப்பட்ட சத்துமாவு கஞ்சியில் பல்லி இருந்ததாக கூறப்படும் நிலையில் 13 குழந்தைகள் உட்பட 29 பேர் மயக்கம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நெய்குப்பி  கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் இன்று காலை வளரிளம் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சத்துமாவு கஞ்சி வழங்கப்பட்டது. அதனை உட்கொண்ட 13 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29 பேர் திடீரென்று மயக்கமடைந்தனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை உடனடியாக வாகனங்கள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் திண்டிவனம் சார் ஆட்சியர் அமீத் மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்வையிட்டு அவர்களுக்கு  உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தினார். நெய்குப்பி  கிராமத்தில் பல்லி விழுந்த சத்துமாவு கஞ்சியை  உட்கொண்ட குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி உட்பட 29  பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

Related posts

தொடர்ந்து 2வது நாளாக தாமதமாக புறப்பட்ட சிங்கப்பூர் விமானம்: பயணிகள் கடும் அவதி

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கூட்டாட்சி முறையை சிதைத்துவிடும் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது: ஒன்றிய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு