விளையாட்டுத் துளிகள்

சங்கங்கள் இணைந்தன தனித்தனியாக செயல்பட்டு வந்த அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பு (ஏஐசிஎப்),  இந்திய சதுரங்க சங்கம் ஆகியவை  ஒன்றாக இணைந்துள்ளன.  இந்த தகவலை ஏஐசிஎப் தலைவர் சஞ்ஜய் கபூர் நேற்று  அறிவித்தார். பல சுற்று பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவை எட்டியுள்ளதாகவும்,  இனி பிரச்னை வராது என்றும் அவர் தெரிவித்தார்.பாக்சிங்கில் பதக்கம்துபாயில் நடைபெறும் ஆசிய இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் தொடக்க நாளான நேற்று இந்திய வீரர்கள் ரோகித் (48 கிலோ), அன்குஷ் (66 கிலோ), கவுரவ் (70 கிலோ), ஆஷிஷ் (54 கிலோ), அன்ஷுல் (57 கிலோ), பிரீத் மாலிக் (63 கிலோ) ஆகியோர்  அரையிறுதிக்கு முன்னேறி பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.ஆர்சிபி-யில் ஹசரங்காராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இலங்கை வீரர்கள் வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, சிங்கப்பூரின் டிம் டேவிட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஐபிஎல் டி20 ஆட்டங்களில் களமிறங்க உள்ளனர். தலைமை பயிற்சியாளர் சைமன் கேடிச்சும் சொந்த காரணங்களுக்காக விலகியுள்ள நிலையில், கிரிக்கெட் இயக்குனர் மைக் ஹெஸ்ஸான் கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.டெல்லி அணி பயணம்நடப்பு சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களில் விளையாடுவதற்காக, டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றனர். காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் முழு உடல்தகுதி பெற்றதை அடுத்து, ஏற்கனவே யுஏஇ சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.நாதன் எல்லிஸ் பராக்!ஐபிஎல் தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ரைலி மெரிடித், கேன் ரிச்சர்ட்சன் விலகியுள்ள நிலையில், ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் வங்கதேசத்துக்கு எதிராக அறிமுகமான போட்டியிலேயே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியவர்….

Related posts

வினேஷ் போகத் மற்றும் நிஷாதாஹியா ஆகியோருக்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் புகழாரம்

பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் காலிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீரர் அமன் ஷெராவத்

வினேஷ் போகத் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: மாமனார் கோரிக்கை