விளைப்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான மசோதா : நாடாளுமன்றத்தில் தாக்கல்!!!

டெல்லி: விவசாய விளைப்பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்வதற்கான தனிநபர் மசோதா ஒன்றை பாரதிய ஜனதா கட்சி எம்.பி. வருண் காந்தி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். வேளாண் சட்டங்களை ஒன்றிய அரசு சட்டப்பூர்வமாக ரத்து செய்திருக்கும் நிலையில் டெல்லி எல்லையில் ஒரு ஆண்டாக நடத்தி வந்த போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டனர். இருப்பினும், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை  ஒன்றிய அரசு ஏற்கவேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேசம் மாநிலம்,  பிலிபிட் தொகுதி பா.ஜ.க உறுப்பினர் வருண் காந்தி நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். இதற்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்வதற்கான விவசாயிகளின் உரிமை மசோதா 2021 என்று பெயரிடப்பட்டுள்ளது. 22 வகையான விவசாய விளைபொருட்களுக்கு அதன் உற்பத்தி செலவில் 50% விவசாயிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வருண் காந்தி அதில் வலியுறுத்தியிருக்கிறார். இது குறித்து சாமிநாதன் கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதோடு விவசாய விளைப் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் என்றும்  வருண் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கென்று, பிரத்யேகமாக அமைச்சகம் ஒன்றும் உருவாக்கப்படவேண்டும் என்று தனிநபர் மசோதாவில் வருண் காந்தி ஓன்றிய அரசை கேட்டுக்கொண்டுள்ளார். …

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்