விளிம்புநிலை மக்கள் அரசை தேடி வர வேண்டாம். நாங்களே தேடி வந்து அடிப்படை வசதிகளை செய்து தருவோம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை :சென்னை திருமுல்லைவாயல் மற்றும் ஆவடியில் நரிக்குறவர் இன மக்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களது வீட்டில் காலை உணவருந்தினார். திருமுல்லைவாயலில்  குறவர் மக்களுடன் தேநீர் அருந்திய அவர், குறவர் இன மக்கள் குடியிருப்பில் மரக்கன்றை நட்டு வைத்தார். மேலும் அவர்களுக்கு குடும்ப அட்டைகள், முதியோர் உதவித் திட்டத் தொகை உள்ளிட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து ஆவடி  நரிக்குறவர் காலணிக்குச் சென்ற அவரை மாலை அணிவித்தும் பூங்கொத்து தந்தும் மாணவிகள் வரவேற்றனர். அங்கு நரிக்குறவர் இன மக்கள் வழங்கிய இட்லி, வடை, நாட்டுக் கோழிக் குழம்பு சாப்பிட்டார். சிறுமிக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.மாணவி திவ்யாவிற்கு அளித்த உறுதிப்படி வீட்டிற்கு சென்று உணவருந்தி மகிழ்ந்தார் ஸ்டாலின்.   பின்னர் சென்னை திருமுல்லைவாயலில் நரிக்குறவர் மக்கள் மத்தியில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ‘மாமல்லபுரம் பெருமாள் கோவிலில் அன்னதான நிகழ்ச்சியில் நரிக்குறவ பெண்ணுக்கு உணவு தர மறுத்ததால் வேதனை அடைந்தேன். கோவிலில் நரிக்குறவ பெண்ணை அமர வைத்து உணவு தர அமைச்சர் சேகர்பாபுவுக்கு உத்தரவிட்டேன். கோவிலில் நரிக்குறவ பெண்ணை அமர வைத்து அமைச்சர் உணவு வழங்கினார்.இன்று இங்கு வசிக்கும் நரிக்குறவ சகோதரி வீட்டுக்கு சென்று கறிசோறு சாப்பிட்டேன். விளிம்புநிலை மக்கள் அரசை தேடி வர வேண்டாம். நாங்களே தேடி வந்து அடிப்படை வசதிகளை செய்து தருவோம். திமுக அரசு விளிம்புநிலை மக்களுக்கான அரசு. நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 2,084 பேருக்கு கான்க்ரீட் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.201 வீடுகளுக்கு கழிப்பறை வசதி நிறைவேற்றம். 226 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.7,824 குடும்பங்களுக்கு ரேஷன் அட்டைகள். 15000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 5,991  பேருக்கு வீட்டுமனை பட்டாக்கள், 2860 பேருக்கு அரசின் இலவச மருத்துவ காப்பீட்டு வசதி தரப்பட்டுள்ளது. 9,468 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது,’என்றார். …

Related posts

ஒன்றிய அரசின் மெத்தனப்போக்கே தமிழக மீனவர்கள் கைதுக்கு காரணம்: எஸ்டிபிஐ குற்றச்சாட்டு

புதுச்சேரியில் கூட்டணி முறிகிறதா? அதிருப்தி பாஜ எம்எல்ஏக்கள் 8 பேர் திடீர் டெல்லி பயணம்

ஒன்றிய அரசின் 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் வரும் 6ம் தேதி உண்ணாவிரத போராட்டம்: திமுக சட்டத்துறை அறிவிப்பு