விளக்கொளி செல்வவிநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

 

காஞ்சிபுரம், ஜன.26: காஞ்சிபுரம் விளக்கொளி கோயில் தோப்பு தெருவில் அமைந்துள்ள செல்வவிநாயகர் கோயிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த கும்பாபிஷேகம் நடந்தது. காஞ்சிபுரம் விளக்கொளி கோயில் தோப்பு தெருவில் ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயில் சேதமடைந்து காணப்பட்டதால், கோயில் நிர்வாகி சார்பில் திருப்பணிகள் நடைபெற்று பணிகள் நிறைவடைந்தன.

இக்கோயிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, கோயில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம், பூர்ணாஹதி பூஜைகள் செய்யப்பட்டு கஜ பூஜை, அஸ்வ பூஜை செய்து தீபாரதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்னர், பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் ராஜகோபுரம், விமானங்கள் மீது ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகமானது விமரிசையாக நடந்தது.

இதனையடுத்து, செல்வவிநாயகருக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் காண்பிக்கப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது, கலசத்தில் உற்றப்பட்ட புனிதநீர், பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், மணிப்பூர் ஐஜி திருஞானசம்பந்தன், காஞ்சிபுரம் போலீஸ் எஸ்பி சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் ஜெயபாலன், கதிர்வேலு, அருள், பிரகாசம், சேகரன், சுரேஷ்குமார், மேகநாதன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related posts

கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறித்தவர் மீது பாய்ந்தது ‘குண்டாஸ்’ வழக்கு

ரங்கம் பூ மார்க்கெட்டுக்கு வந்த மினிலாரி கவிழ்ந்து ஆட்டோ, டூவீலர் சேதம்

திருச்சியில் இருந்து கரூர் வரை செல்லும் ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாக மாற்றம்: விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தல்