வில்வித்தை போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவி சாதனை

திருவள்ளூர்: வில் வித்தை போட்டியில் வேலம்மாள் பள்ளி மாணவி, தங்கம் வென்று சாதனை படைத்தார்.தமிழ்நாடு இளைஞர்கள் வில் வித்தை சங்கம் சார்பில், தமிழ்நாடு உள்ளரங்க வில் வித்தை 2வது சாம்பியன்ஷிப் – 2022 போட்டி கோவை, பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ.கல்வி நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்தது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து பள்ளிகள் பங்கேற்றன.அதன்படி சென்னை வேலம்மாள் வித்யாலயா இணைப்பு பள்ளியின் 4ம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா கலந்துகொண்டு விளையாடினார். இந்த போட்டியின் ரீகர்வ் போ எனப்படும் சுற்றில் 10 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் மிக்ஸ் ஸ்பாட் என்றழைக்கப்படும் போட்டியில், வேலம்மாள் வித்யாலயா மாணவி எஸ்.சஞ்சனா தங்கம் வென்றார். இதையடுத்து இவரது சாதனையை பள்ளி தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டினர்….

Related posts

போன மாதம் கிரிக்கெட் ஸ்டேடியம்; இந்த மாதம் ஹாக்கி ஸ்டேடியம்; விரைவில் பணிகள் துவக்கம்

ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி தேர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

ராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் ரூ.9000 கோடியில் டாடா கார் தொழிற்சாலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்; 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்