வில்லிவாக்கம் ஒன்றியத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா

ஆவடி: வில்லிவாக்கம் ஒன்றியத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா தொற்று காலத்தில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் மற்றும் பாராட்டு விழா ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஒன்றிய குழுத்தலைவர் பா.கிரிஜா தலைமை தாங்கினார். அயப்பாக்கம் ஊராட்சி தலைவரும், வில்லிவாக்கம் ஒன்றிய திமுக செயலாளருமான துரை வீரமணி வரவேற்றார். ஒன்றிய துணை தலைவர் ஞானபிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக மதுரவாயல் எம்எல்ஏ காரம்பாக்கம் க.கணபதி கலந்து கொண்டு மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள் உட்பட 500க்கு மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும், அவர்களுக்கு கேடயம், பாராட்டு சான்றிதழுடன் சால்வை அணிவித்து கவுரவித்தார். நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் லோகநாயகி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியம், ஜோதி, மாவட்ட கவுன்சிலர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் வினோத், தயாநிதி, ஜெயசுதா, ராஜேஸ்வரி, இசைவாணி உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்