விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பாதயாத்திரை

வத்திராயிருப்பு/சிவகாசி, மே 8: விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வத்திராயிருப்பு, சிவகாசியில் பாதயாத்திரை நடைபெற்றது. விவசாயிகள், தொழிலாளர்கள் விரோத பாரதிய ஜனதா அரசை அகற்றி தேசத்தை பாதுகாக்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாதயாத்திரை இயக்கம் வத்திராயிருப்பில் தொடங்கியது.நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார். தேசியக்குழு உறுப்பினர் இராமசாமி பாதயாத்திரை இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சவுந்தர பாண்டியன், தாலுகா துணைச்செயலாளர் மகாலிங்கம், நகர செயலாளர் காளீஸ்வரன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் பாண்டிச்செல்வி, அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் பிச்சுமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மாரியப்பன், ஈஸ்வரன், அம்மாசி விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ராமதாஸ், விவசாய தொழிலாளர் சங்க தாலுகா செயலாளர் மணிக்குமார், விவசாயிகள் சங்க தலைவர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசி பேருந்து நிலையம் முன்பு தொடங்கிய யாத்திரைக்கு கட்சியின் வட்டாரச் செயலர் ஜீவா தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் சமுத்திரம் தொடங்கி வைத்தார். சிவகாசி-திருவில்லிபுத்தூர் சாலையில் ரிசர்வ்லைன் பேருந்து நிறுத்தம் அருகே பாத யாத்திரை நிறைவு பெற்றது. கட்சியின் நகரச் செயலாளர் இக்பால், மாவட்டக் குழு உறுப்பினர் கூடலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’