விற்பனை நிலையங்களில் தற்காலிக பணியாளர்கள் நியமனம்: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தகவல்

சென்னை: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் காலி பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோ-ஆப்டெக்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குனர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பு: கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள விற்பனை நிலைய பணிகளை நிரப்பும் வகையில் தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர். இதற்கான அனுமதி விற்பனை அடிப்படையிலும், விற்பனை நிலைய பரப்பளவு அடிப்படையிலும் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இவர்களுக்கான தினக்கூலி அந்தந்த மாவட்ட நிர்வாகம் நிர்ணயிக்கும் தொகையின் அடிப்படையிலேயே வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது கொரோனா ஊரடங்கிற்கு பின்பு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டு தற்காலிக பணியாளர்களை நியமிப்பது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு அனைத்து விற்பனை நிலையங்களுக்கும் தற்காலிக பணியாளர்களை நியமிக்க அனுமதிக்கப்பட்டு விட்டது என்பதை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு விற்பனையை அதிகப்படுத்த உதவுவதற்கும் மற்றும் கைத்தறி இரகங்களின் சிறப்பை பற்றி வாடிக்கையாளர்களுக்கு விளக்கவும் கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக பிரிவு ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவு ஊழியர்கள் தற்காலிகமாக ஒவ்வொரு விற்பனை நிலையங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் விற்பனை பெருக்கத்தினை அதிகரிக்க உடனடி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

Related posts

குப்பையில் கிடந்த துப்பாக்கி

வீட்டை இடிக்க அதிகாரிகள் வந்ததால் நடுரோட்டில் தீக்குளித்த வாலிபர்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

மழைநீர் கால்வாயை முறையாக அமைக்காததால் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை கோரி பெண்கள் மறியல்