விருதுநகர் மாவட்டத்தில் மறுமுத்திரை சான்று பார்வைக்கு வைக்காத வணிகர்கள் மீது நடவடிக்கை

விருதுநகர், ஏப். 12:விருதுநகர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் காளிதாஸ் தகவல் மாவட்டத்தில் ஏப்.9ல் இறைச்சி, மீன் கடைகளில் சட்டமுறை எடையளவு சிறப்பாய்வு நடைபெற்றது. எடையளவுகள் மறுமுத்திரையிடப்பட்டதற்கான சான்று நுகர்வோர் பார்க்கும் வகையில் வெளிகாட்டி வைக்காத 19 வணிகர்கள் மீதும், தராசின் எடையினை சரிபார்க்க வணிகர்கள் வைத்திருக்க வேண்டிய சோதனை எடைக்கற்கள் வைக்காத 2 வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் மறுமுத்திரையிடப்பாடாத 8 மின்னணு தராசுகள், 1 சி விட்ட தராசு, 2 மேசை தராசுகள், 20 இரும்பு எடைக்கற்கள் தெருவோர வியாபாரிகளிடம் பறிமுதல் செய்யப்பட்டது. முதலாம் குற்றச்சாட்டிற்கு ரூ.25ஆயிரம் அபராதம், 2 மற்றும் அதற்கு அடுத்த குற்றங்களுக்கு 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். இறைச்சி, மீன் கடைகளில் சிறப்பாய்வு ஏப்.22ல் மீண்டும் நடைபெறும் என தெரிவித்துள்ளார். நுகர்வோர் எடை குறைபாடுகள் தொடர்பான புகார்களை 04562-225130 எண்ணில் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’