விருதுநகர் கல்லூரிகளில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம்

விருதுநகர், ஜன.14: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் விவிவி பெண்கள் கல்லூரியில் பொங்கல் விழாவில் மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையணிந்து துறை வாரியாக பொங்கலிட்டு கொண்டாடினர். வண்ணக் கோலங்களிட்டும், தோரணங்கள் கட்டியும், கரும்பு, மஞ்சள் வைத்து பொங்கலிட்டு தைத்திருநாளை வரவேற்றனர். விழாவில் கல்லூரி தலைவர் பழனிச்சாமி, உபதலைவர் சிவபால ஈஸ்வரி சந்தோஷ்குமார், செயலர் கோவிந்தராஜபொருமாள், கூட்டு செயலர் லதா, பொருளாளர் ரவிசங்கர், முதல்வர் மீனா ராணி, பேராசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டு போட்டிகளான உறிஅடித்தல், கயிறு இழுக்கும் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து துறைகளிலும் மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து படையலிட்டு கொண்டாடினர். விழாவில் கல்லூரி தலைவர் பழனிச்சாமி, உபதலைவர்கள் ரம்யா, ராஜமோகன், செயலாளர் சர்ப்பராஜன், பொருளாளர் சக்திபாபு, முதல்வர் சாரதி, சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் முன்னிலை வகித்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை