விருதுநகர் ஆமத்தூரில் பள்ளி ஆசிரியர்களுக்கு திருக்குறள் பயிலரங்கம்

 

விருதுநகர், ஜூலை 13: விருதுநகர் அருகே ஆமத்தூரில் உள்ள கல்லூரியில் திருக்குறளை ஆசிரியர்கள் கற்பித்தல் பயிலரங்கம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் 1,330 குறள்களை ஒப்புவித்தல் செய்த 7 அரசு பள்ளி மாணவியர்களுக்கு திருக்குறள் புத்தகங்களை கலெக்டர் பரிசளித்தார். பின்னர் கலெக்டர் பேசுகையில், ‘திருக்குறளை கற்பிப்பதற்கு பலவிதமான வாய்ப்புகள் உள்ளன. 1,330 திருக்குறளையும் கற்பிப்பதற்கு தமிழ் இணைய வழி கழகம் உள்ளது.

அதில் 1,330 குறளுக்கும் ஓவிய விளக்கமும், நாட்காட்டியும் உள்ளன. திருக்குறறை வாழ்வியலாக மாற்ற வேண்டும். ஏனென்றால் தற்போதுள்ள நுகர்வு கலாச்சாரம் கூடுதலாக வர, வர நம்முடைய தேவைகள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. திருக்குறளில் நன்றாக வாசிக்க கூடிய நினைவாற்றல் இருக்ககூடிய, கல்வியில் சிறந்த விளங்கும் மாணவர்களை தேர்வு செய்து ஆசிரியர்கள் ஊக்குவிக்கும் போது ஒவ்வொரு வருடமும் திறக்குறளை கற்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகப்படுத்த முடியும்.

திருக்குறளை கற்பிப்பது மிக முக்கியம், ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாணவனை ஓராண்டிற்கு 360 திருக்குறளை மனப்பாடம் செய்து வைத்து குரல் மாணவனாக உருவாக்க வேண்டும். இதன்மூலம் அரசு வழங்கும் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையை பெற முடியும். திருக்குறள் மீது ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இருந்தால் எதிர்கால குழந்தைகள் நலத்திற்கும், தமிழ் சமூக நலத்திற்கும் உறுதுணையாக இருக்கும்’ என்றார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி தமிழ் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related posts

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சிறப்பு குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த விழா

ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலம் மீட்பு