விருதுநகரில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை

விருதுநகர், ஜூலை 24: விருதுநகர் காய்கறி மார்க்கெட்டில் தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. இஞ்சியின் விலை பாதியாக குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக ஒரு கிலோ தக்காளியின் விலையானது ரூ.140 வரை விற்கப்பட்டு வந்தது. இதையடுத்து தமிழக அரசின் சார்பில் ரேசன் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்கப்பட்டதாலும், சந்தைக்கு தக்காளி வரத்து காரணமாகவும் அதன் விலையிலும் சற்று மாற்றம் காணப்படுகிறது. எனவே, நேற்று விருதுநகர் காய்கறி சந்தையில் ஒரு கிலோ தக்காளி ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் ஒரு கிலோ இஞ்சியின் விலையானது கடந்த வாரம் வரை ரூ.400 வரை விற்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பழைய இஞ்சி கிலோ ரூ.220க்கும், புதிய இஞ்சி கிலோ ரூ.120க்கும் விற்கப்பட்டது. மேலும், கடந்த வாரம் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120க்கு விற்கப்பட்டது. நேற்று கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் சின்ன வெங்காயம் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.140 முதல் 160 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது அதில் சற்று குறைவு ஏற்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூ.100 முதல் 120 வரை விற்பனையாகிறது. இதனால் இல்லத்தரசிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து