விருதுநகரில் இன்று பாஜ தேர்தல் அலுவலகம் திறப்பு

விருதுநகர், பிப். 10: விருதுநகர் தாமரை நகரில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில் விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தல் அலுவலக திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா, கன்னியாகுமரி பெருங்கோட்ட பொறுப்பாளர் பொன்.பாலகணபதி, கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணகுமார், இணை கோட்ட அமைப்பு செயலாளர் கிருஷ்ணன், மாநில பொதுச்செயலாளர் இராம சீனிவாசன், மதுரை கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெற்றிவேல், கஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

விழா ஏற்பாடுகளை விருதுநகர் கிழக்கு மாவட்டத் தலைவர் பென்டகன் பாண்டுரங்கன், மேற்கு மாவட்ட தலைவர் சரவணத்துரை, மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார் உள்ளிட்டோர் செய்துள்ளனர். திறப்பு விழாவுக்கு பின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விழாவில் திரளான பாஜ தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் எனவும், நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் பென்டகன் பாண்டுரங்கன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு