விருகம்பாக்கம் பகுதியில் தானியங்கி கதவு பூட்டியதால் வீட்டிற்குள் சிக்கி தவித்த 7 வயது சிறுமி: பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்

சென்னை: சென்னை விருகம்பாக்கம், ஜெய்ன் கென்ஸ் அபார்ட்மெண்ட் ரெட்டி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பின் 3வது தளத்தில் பொறியியல் தம்பதி தனது இரண்டு மகள்களுடன் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூத்த மகள் பள்ளியில் இருந்து அழைத்து வர அவரது தாய் வெளியே சென்றுவிட்டார். அப்போது வீட்டில் இளைய மகள் சாய் கிராணா(7) தூங்கி கொண்டிருந்ததால் அவரது தாய் வீட்டின் கதவை பூட்டாமல் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி கதவு தானாக பூட்டி கொண்டது. இதனால் உள்ளே சிக்கி கொண்ட சாய் கிராணா வெளியே வரமுடியாமல் அழுதுகொண்டு இருந்துள்ளார். வீட்டின் சாவியை எடுத்து செல்லாததால் பூட்டிய வீட்டின் கதவை திறக்க முடியாமல் அவரது தாய் தவித்தார். பிறகு சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் விருகம்பாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான தீயணைப்பு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வீட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் தானியங்கி கதவு என்பதால் திறக்க முடியாவில்லை. பிறகு தீயணைப்பு வீரர் அகஸ்டின் அமர்நாத் அடுக்குமாடி குடியிருப்பின் பின் பக்கம் ஏணி உதவியுடன் ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்று 7 வயது சிறுமியை பத்திரமாக மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தார்….

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்