விராலிமலை அரசு பள்ளி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம்

விராலிமலை, ஆக. 20: விராலிமலை அரசு பள்ளி அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி பல்வேறு வியாபார கடைகள் அமைக்கப்பட்டு இருந்தது இக்கடைகளால் வகுப்பறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இடையூறு இருப்பதாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா உத்தரவின் பேரில், நெடுஞ்சாலைத்துறையினர் சுற்றுச்சுவரை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளின் இரும்பு பெட்டிகளை சனிக்கிழமை கிரேன் இயந்திரம் மூலம் தூக்கிச் சென்று அகற்றினர். கடைவீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் சற்று நேரம் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை