விராலிமலையில் 10ம்தேதி சிறப்பு முகாம் தடுப்பூசி செலுத்தாதவர்களை அழைத்து வர வேண்டும்-ஊராட்சி அமைப்பினருக்கு அறிவுறுத்தல்

விராலிமலை : கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து அழைத்து வருமாறு ஊராட்சி தலைவர்கள், செயலர்கள், பணித்தள பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் (கிஊ), ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விராலிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 45 ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி பணித்தள பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்:தமிழக அரசு சார்பில் வரும் அக்டோபர் 10ம் தேதி கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் விராலிமலை வட்டத்தில் 45 ஊராட்சிகளில், 53 மையங்களில் காலை 7 முதல் மாலை 7 மணி வரை நடைபெறுகிறது. இந்த சிறப்பு முகாமில் முதல் தவணை ஊசி செலுத்தி கொண்டவர்களை இரண்டாம் தவணை ஊசி செலுத்துமாறும், முதல் முறை ஊசி செலுத்தாதவர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் பொதுமக்களிடம் ஊராட்சி தலைவர்கள், செயலாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள் நேரிடையாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தி அவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.இதில் கலால் மேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் (குன்னத்தூர்), விராலிமலை தாசில்தார் சரவணன், வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்….

Related posts

சிங்கப்பெருமாள் கோவில் அருகே மினி லாரி டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து: சிதறிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனர்

ஓரிக்கை சமத்துவபுரம் குடியிருப்பில் மழைநீர் வடிகால்வாய் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

உத்திரமேரூரில் திரவுபதியம்மன் கோயிலில் துரியோதனன் படுகளம்