விராலிமலையில் மணல் அள்ளிய லாரி பறிமுதல்

 

விராலிமலை, ஜூலை 6: விராலிமலை அருகே அனுமதியின்றி மணல் அள்ளி சென்ற மினி டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். விராலிமலை அருகே உள்ள கோரையாற்று பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக விராலிமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விராலிமலை அருகே உள்ள துலுக்கம்பட்டி கோரையாறு பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக மணல் ஏற்றிவந்த மினி டிப்பர் லாரியை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 2 யூனிட் மணல் அனுமதியின்றி கடத்தி வந்தது தெரிய வந்தது இதை தொடர்ந்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீஸார் ஓட்டுநர் விராலூர் வடக்கு தெருவை சேர்ந்த மணிவேல்(36) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஆர்வத்துடன் மீன்பிடிக்கும் இளைஞர்கள்

நென்மேனி சாலையில் ரயில்வே மேம்பால பணி விரைவில் தொடங்குமா? மக்கள் எதிர்பார்ப்பு

உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்