வியாபாரிகள் சங்கம் சார்பில் அஞ்சலி

மஞ்சூர், ஆக.4: வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு மஞ்சூர் அணைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் 500கும் மேற்பட்டோர் மண்ணுக்குள் புதைந்தனர். பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர். இதில், 330கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டது. பலர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன பலரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மஞ்சூரில் நடைபெற்றது. அனைத்து வியாபாரிகள் சங்கம், ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள், பொதுநல அமைப்புகள் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வியாபாரி சங்க தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் பாரூக், அம்மன்ரவி, திலிப்குமார், வினோஜ், சந்திரன், சின்ராசு, கீழ்குந்தா பேரூராட்சி முன்னாள் திமுக செயலாளர் ராஜூ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் ஆரி உள்பட பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்