விமான கட்டணத்துக்கு இணையாக தனியார் பஸ்களில் கட்டணம் வசூலிப்பு: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

சென்னை: சென்னையில் இருந்து கோவை செல்ல, விமான கட்டணத்துக்கு இணையான தொகை தனியார் பஸ்சில் வசூலிக்கப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதனை முன்னிட்டு, பயணிகள் நெரிசலின்றி பயணிக்க ஏதுவாக தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து கூடுதலாக 3,000 பேருந்துகள் இயக்க இருப்பதாகவும், தேவைப்படின் கூடுதல் பேருந்துகளை இயக்க தயாராக இருப்பதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் பேருந்துகளில் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், குறிப்பாக குளிர்சாதன வசதியுடன் கூடிய சென்னை-கோவை வழித்தடத்திற்கான கட்டணம் ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது. சென்னை – கோவை விமான கட்டணம் ரூ.3,100 என்று இருக்கும் நிலையில், பேருந்து கட்டணம் ரூ.2,800 வரை வசூலிக்கப்படுகிறது. விமான கட்டணத்திற்கும் தனியார் பேருந்து கட்டணத்திற்கும் உள்ள வித்தியாசம் ரூ.300 மட்டுமே. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தனி கவனம் செலுத்தி, தனியார் பேருந்துகளில் வசூலிக்கப்படும் அபரிமிதமான கட்டண உயர்வை தடுத்து நிறுத்துவதோடு, நியாயமான கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு வழிவகை செய்ய காவல் துறை மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்….

Related posts

சொல்லிட்டாங்க…

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து அதிமுக ஆலோசனை !!