விமானம் தாமதம் ஒன்றிய அமைச்சர் 2 மணிநேரம் தவிப்பு

சென்னை: விமானம் தாமதத்தால் ஒன்றிய அமைச்சர் 2 மணி நேரம் தவித்தார். ஒன்றிய பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சர் கபில் மொரிஸ்வர் பாட்டீல், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு மதுரையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் சென்னைக்கு வந்து, இரவு 8.30 மணிக்கு மும்பை செல்லும் விஸ்தாரா விமானத்தில் செல்வதற்கு ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். எனினும், மதுரையில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் மிகவும் தாமதமாக இரவு 8.15 மணிக்கு வந்தது. இதை தொடர்ந்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ் கவுன்டருக்கு சென்றார். ஆனால் அமைச்சரின் டிக்கெட் முன்பதிவை ரத்து செய்துவிட்டனர்.இதனால் உள்நாட்டு விமான நிலைய விவிஐபி அறையில் கபில் மொரிஸ்வர் பாட்டீல் சுமார் 2 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு, இரவு 10.30க்கு புறப்பட்டு சென்றார்….

Related posts

சொத்து தகராறில் பெண் தற்கொலை

சிறுவர் பூங்கா, நடைபாதை உள்ளிட்ட வசதிகளுடன் மேடவாக்கம் பெரிய ஏரியை சீரமைக்க முடிவு: விரைவில் பணிகள் தொடங்குகிறது

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையிலான மெமு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு