விமானப்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்க, 20 முறை வானில் பறந்து சென்ற ஹெலிகாப்டர்; குன்னூரில் சுற்றுலா பயணிகள் ரசிப்பு

குன்னூர்: விமானப்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்க, குன்னூர் ஜிம்கானா மைதானத்தில் 20 முறை வானில் பறந்துசென்ற ஹெலிகாப்டரை பார்த்து சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஜிம்கானா மைதானம் உள்ளது. ராணுவ கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த பகுதியில் விமானப்படை அதிகாரிகளுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு எம்ஐ 17 ரக ஹெலிகாப்டரில் பைலட்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. காலை முதல் மதியம் வரை இந்த பயிற்சி நடந்தது.ஹெலிகாப்டரை தரையில் இருந்து உயர்த்தி செல்லும் பயிற்சி, பேரிடர் காலத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ளும் விதத்தில், அந்தரத்தில் சிறிது நேரம் ஹெலிகாப்டரை நிலைநிறுத்துவது மற்றும் உயரத்தில் பறந்து தரையிறக்குவது உள்ளிட்ட பயிற்சிகள் பைலட்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி காரணமாக 20-க்கும் மேற்பட்ட முறை வானில் ஹெலிகாப்டர் பறந்து சென்றது. இதனால் ஹெலிகாப்டரை சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கண்டு ரசித்ததுடன் புகைப்படங்களும் எடுத்தனர்….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை