விமானத்தில் மயங்கிய பயணிக்கு சிகிச்சை அளித்த புதுவை கவர்னர்

புதுச்சேரி:  தெலங்கானா கவர்னரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அதிகாலை 3 மணியளவில் டெல்லியிலிருந்து ஐதராபாத் செல்வதற்காக விமானத்தில் பயணித்தார். நடுவானில், காலை 4 மணியளவில் `யாராவது மருத்துவர் இருக்கிறீர்களா, பயணி ஒருவர் மயங்கிய நிலையில் உள்ளார்’ என்று விமான பணிப்பெண் அறிவிப்பு விடுத்தார். இதை கேட்ட உடனே கவர்னர் சென்று பார்த்தபோது, பயணி ஒருவர் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். உடனடியாக, முதலுதவி சிகிச்சை அளித்து அவர் அருகிலேயே அமர்ந்து கவர்னர் பயணித்தார். அவர் உடல் நிலை சற்று சரியாகி கண் விழித்து முகத்தில் சிரிப்பை பார்த்த பிறகுதான், பயணிகள் அனைவருக்கும் நிம்மதியானது. அவசரமாக முதலுதவி சிகிச்சை அளித்த கவர்னர் தமிழிசையை சக பயணிகள் பாராட்டினர். இதை பயணி ஒருவர் புகைப்படம் எடுத்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கவர்னருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்….

Related posts

கன்னியாகுமரி ஜீரோ பாயிண்டில் தேசிய கொடி பறப்பதை உறுதி செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

நிலஅளவை, நில ஆவணங்கள் தொடர்பான இணையவழிச் சேவைகளின் விவரம்

My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல்: டான்பிட் நீதிமன்றம் உத்தரவு