விமானத்தில் சென்னைக்கு கடத்திய ரூ.7 கோடி போதைப்பொருள் பறிமுதல்; இளம்பெண் சிக்கினார்

சென்னை: சார்ஜாவில் இருந்து ஏர் அரேபியா சிறப்பு பயணிகள் விமானம் நேற்று காலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அந்த விமானத்தில் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் பெருமளவு போதைப் பொருளை கடத்தி வருவதாக சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், சுங்கத்துறையினர் அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, உகாண்டாவை சேர்ந்த 29 வயது பெண் பயணி மீது சந்தேகம்  ஏற்பட்டது. அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் இருந்த பார்சலில் 108 கேப்சூல்கள் இருந்தன. அதை உடைத்து பாா்த்தபோது, உள்ளே ஹெராயின் போதை பொருள் இருந்தது. மொத்தம் 108 கேப்சூல்களில் 1.7 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி. இதையடுத்து உகாண்டா நாட்டு பெண் பயணியான ஜுடித் டூவினோம்வெபிமெப்ஸி (29) என்பவரை கைது செய்த சுங்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்