விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையோரங்களில் குப்பைகளை எரிக்கக்கூடாது

 

கரூர், ஜூலை 20: கரூர் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் விபத்தை விளைவிக்கும் வகையில் குப்பைகள் சாலையோரம் எரிக்கப்படுவது தடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு குப்பை கிடங்கில் சேகரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், சில பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அந்தந்த பகுதிகளின் சாலையோரத்தில் கொட்டி பின்னர் எரிக்கப்பட்டு வருகிறது.

முக்கிய சாலைப்பகுதிகளில் குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் ஏற்படும் புகையின் காரணமாக விபத்துக்களும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் கரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக நடைபெற்று வருகிறது. எனவே, இது குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி